வெளிநாட்டு நாணயத் தாள்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முயற்சித்த இருவர் கைது

வெளிநாட்டு நாணயத் தாள்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முயற்சித்த இருவர் கைது

வெளிநாட்டு நாணயத் தாள்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முயற்சித்த இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2015 | 12:37 pm

45 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நாணயத் தாள்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்கொக்கிற்கு செல்லவிருந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சட்டப் பிரிவு பணிப்பாளருமான லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் பைகளுக்குள் மறைத்து வெளிநாட்டு நாணயத் தாள்களை எடுத்துச் செல்ல முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இருவரும் கடவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்