யாழ் இந்துக் கல்லூரியில் சிவராமலிங்க ஞாபகார்த்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது

யாழ் இந்துக் கல்லூரியில் சிவராமலிங்க ஞாபகார்த்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2015 | 9:15 pm

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சிவராமலிங்க ஞாபகார்த்த நூலகம் மாணவர்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டது.

கல்லூரியில் இடம்பெற்ற இந்த விழாவில் யாழ் இந்துக் கல்லூரியின் கொழும்பு கிளையின் பிரதித் தலைவர் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே ஸ்ரீ ரங்காவும் கலந்துகொண்டார்.

சிவராமலிங்க ஞாபகார்த்த நூலகத்தின் உட்கட்டுமானப் பணிகளை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மேற்கொண்டதோடு, ஐக்கிய இராஜ்ஜிய கிளையின் பூரண நிதி இந்த நூலகம் கட்டப்பட்டது.

இந்து கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற விசேட பூஜைகளின் பின்னர் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் கணிதப் பிரிவில் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவன் தாரூசீகன் இதனை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கல்லூரியின் அதிபருடன் ,யாழ் இந்துக் கல்லூரியின் கொழும்பு கிளையின் பிரதித் தலைவர் 125 ஆவது ஆண்டு விழாவின் ஏற்பாட்டாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்கா மற்றும் பழைய மாணவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஈ. சரவணபவன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராஜ்ஜியக் கிளையின் தலைவர் சுகந்தன், சங்கத்தின் உறுப்பினர்களான ஜெயப் பிரகாஷ், மற்றும் துறையப்பா பிரபாகரன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

நூலக திறப்பு விழாவின் போது ஐக்கிய இராஜ்ஜிய கிளையினராலும் யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களாலும் நூலகத்திற்கு நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராஜ்ஜியக் கிளையின் அன்பளிப்பு பொருட்கள் பாராளுமன்ற​
உறுப்பினர் ஜே.ஸ்ரீறங்காவினாலும் பழைய மாணவர்களாலும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்