முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதசுவாமி ஆலயத்திலுள்ள சாசனம் தொடர்பில் ஆய்வு

முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதசுவாமி ஆலயத்திலுள்ள சாசனம் தொடர்பில் ஆய்வு

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2015 | 11:20 am

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்ற முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதசுவாமி ஆலயத்தில் பதியப்பட்டுள்ள சாசனம் குறித்து ஆய்வுகள் முன்டெுக்கப்படுகின்றன.

புத்தளம் மாவட்டத்தின் சிலாபத்தில் இருந்து கிழக்கு திசையின் 2 கிலோ மீற்றர் தூர்த்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிவற்றை கொண்டு விளங்கும் பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்ற முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் அற்புத சாசனம் ஒன்று மூலஸ்தானத்தின் பின்சுவரில் பதியப்பட்டுள்ளது.

இங்கு பதியப்பட்டுள்ள நீண்ட சாசனத்தை ஆறாம் பராக்கிரமபாகு தனது கல் வெட்டுக்களில் செதுக்கியுள்ளார்.

பதியப்பட்டுள்ள கல் வெட்டுக்கள் சமஸ்கிருதமும் தமிழும் கலந்த சாசனமாகும்.

இந்த சாசனம் தொடர்பில் தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் இந்த சாசனத்தை இலங்கையிலுள்ள பல ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ந்து வந்தனர்.

இங்கு மேலும் ஒரு கல்வெட்டு காணப்படுவதாகவும் அதனையும் ஆராச்சியாளர்கள் ஆராய்ந்து வருவதாகவும் முன்னேஸ்வரம் ஆலயத்தின் பிரம்மஸ்ரீ பத்மநாபக் குருக்கள் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்