தென் ஆப்பிரிக்காவை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து இறுதி போட்டிக்கு தகுதி

தென் ஆப்பிரிக்காவை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து இறுதி போட்டிக்கு தகுதி

தென் ஆப்பிரிக்காவை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து இறுதி போட்டிக்கு தகுதி

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2015 | 5:23 pm

உலகக் கிண்ண கிரிக்கெட்டின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

நியூசிலாந்து-தென் ஆபிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் நாணயச் சுழற்ச்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் துடிப்பெடுத்தாடியது.

தென்னாப்பிரிக்கா 30.3 ஆவது ஓவரில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 132 ஓட்டங்களை எடுத்தது.

ஆனால் தென் ஆப்பிரிக்காவின் எழுச்சியில் மழை குறுக்கிட்டது. தென் ஆப்பிரிக்கா 38 ஓவர் விளையாடி இருந்த நிலையில் மழைபெய்தது. மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்கா 38 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களை எடுத்து இருந்தது.

மழை நியூசிலாந்து அணிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தது. மழை நின்ற பின்னர் ஓவர்கள் 43 ஆக குறைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா வீரர் மில்லர் சிறப்பாக விளையாடினார்.

டிவில்லியர்ஸ் மற்றும் மில்லர் இறுதி கட்டத்தில் அபாரமாக விளையாடியதால் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 281 ஓட்டங்களை எடுத்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்