சிவில் அமைப்புடனான கலந்துரையாடலின் பின்னர் தேசிய நிறைவேற்று சபையில் இணைய தீர்மானம் – ஜே.வி.பி

சிவில் அமைப்புடனான கலந்துரையாடலின் பின்னர் தேசிய நிறைவேற்று சபையில் இணைய தீர்மானம் – ஜே.வி.பி

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2015 | 7:26 pm

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை தோல்வியடையச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடிய பின்னர், தேசிய நிறைவேற்று சபையில் பங்கேற்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

புதிய அரசியல் கலாசாரத்தின் மூலம் ஏற்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கண்காணித்துவருவதாக முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெறவிருந்த தேசிய நிறைவேற்று சபையின் கூட்டம் அரசாங்கத்தினால் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்க கொள்கை என்ற போர்வையில், குடும்ப அரசாங்கம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், அதனூடாக அமைச்சரவை மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்