சமூக வலைத்தள கருத்துக்களுக்காக தண்டனை வழங்கும் சட்டம் செல்லுபடியாகாது:  இந்திய உச்ச நீதிமன்றம்

சமூக வலைத்தள கருத்துக்களுக்காக தண்டனை வழங்கும் சட்டம் செல்லுபடியாகாது: இந்திய உச்ச நீதிமன்றம்

சமூக வலைத்தள கருத்துக்களுக்காக தண்டனை வழங்கும் சட்டம் செல்லுபடியாகாது: இந்திய உச்ச நீதிமன்றம்

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2015 | 4:16 pm

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்து, தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவு செல்லுபடியாகாது என இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய அரசு, சமூக வளைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்படும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், 66ஏ சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பற்றி கேளிக்கையான செய்தி பரப்பிவிட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்டபோதும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு சிவசேனா தலைவர் பால்தாக்ரே மறைந்த பின் நடந்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் குறித்து இளம்பெண் இருவர் சமூக வளைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதை தொடர்ந்து அந்த மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சட்ட மாணவி ஷெரேயா ஷிங்கால், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிறர் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்து, தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை இரத்து செய்தது.

சமூக வளைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால் தண்டனை விதிக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம் 66ஏ செல்லுபடியாகாது.

இந்த சட்டத்திருத்தம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அரசியலில் மற்றம் ஏற்படலாம் ஆனால் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுவிடக்கூடாது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி சுதந்திரமாக ஒருவர் கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது. என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்