கட்டார் அரச தலைவர் தமீம் பின் அஹமட் அல் தானி இலங்கை விஜயம்

கட்டார் அரச தலைவர் தமீம் பின் அஹமட் அல் தானி இலங்கை விஜயம்

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2015 | 9:09 am

கட்டார் அரசத் தலைவர் ஷெயிக் தமீம் பின் அஹமட் அல் தானி இன்று மாலை நாட்டை வந்தடைந்தார்.

இன்று மாலை நாட்டிற்கு வருகை தந்த கட்டார் அரசத் தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வைத்து வெளிவிவகார அமைச்சரினால் வரவேற்கப்பட்டனர்.

அதன் பின்னர் கட்டார் அரச தலைவர் ஷெயிக் தமீம் பின் அஹமட் அல் தானி ஜனாதிபதி செயலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

இதன்போது இரண்டு நாடுகளுக்கு இடையில் 3 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

விளையாட்டு, செய்தி பரிமாற்றல் மற்றும் இளைஞர் விவகாரம் தொடர்பான உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்