இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை

இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை

இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2015 | 1:29 pm

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் 54 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய மீனவர்களை இன்று ஊர்காவற்துறை மற்றும் மன்னார் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை கடற்றொழில் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

தமிழக மீனவர்கள் 54 பேரையும் விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் ஆலோசனையும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து 05 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது கடந்த 21 ஆம் திகதி இரவு புதுக்கோட்டையைச் சேர்ந்த 21 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எஞ்சிய 33 மீனவர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் 05 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்கள் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சென்னையில் இன்று மீனவர்களுக்கிடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறுகின்ற நிலையில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்

எவ்வாறாயினும் மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 10 படகுகளை விடுவிப்பதற்கான அனுமதியை சட்டமாஅதிபர் திணைக்களம் வழங்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்