இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை இன்று சென்னையில்

இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை இன்று சென்னையில்

இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை இன்று சென்னையில்

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2015 | 10:46 am

இலங்கை – இந்திய மீனவப் பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையிலுள்ள மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கு இந்தியா சார்பில் மீனவர்கள் அடங்கலாக 17 பிரதிநிதிகளும், இலங்கை சார்பில் மீனவர்கள் அடங்கலாக 16 பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

இலங்கை – இந்திய மீனவர்கள் இருசாராரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இன்றைய சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தினால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இலங்கை மீனவ பிரதிநிதிகள் இதன்போது இந்திய அதிகாரிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டியுள்ளனர்.

அத்துடன், இந்திய மீனவர்கள் பாக்குநீரிணை பகுதியில் நல்லிணக்க அடிப்படையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் குறித்து இன்றைய கலந்துரையாடலில் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரு நாடுகளினதும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்தப் பேச்சுவார்த்தை ஏற்கனவே இரண்டு சந்தர்ப்பங்களில் சென்னையிலும் கொழும்பிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்