ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2015 | 3:35 pm

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்   ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இவர்களில் 11 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் 5 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை பிரதி அமைச்சர்களாக 10 பேரும் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

இடர் முகாமைத்துவ அமைச்சராக ஏ.எச்.எம்.பௌஸி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமானம் செய்துள்ளார்.

தொழில் அமைச்சர் பதவி எஸ்.பி.நாவின்னவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கிராமிய விவகார அமைச்சராக எஸ்.பி.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனக பண்டார தென்னகோனுக்கு மாகாண சபைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

விசேட செயற்றிட்ட அமைச்சராக பீலிக்ஸ் பெரேரா பதவிப் பிரமானம் செய்துள்ளார்.

பாராளுமன்ற விவகார அமைச்சர் பதவி மஹிந்த யாப்பா அபேவரத்தனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

விமான சேவைகள் அமைச்சராக ரெஜினோல்ட் குரே பதவியேற்றுள்ளார்.

விஜித் விஜயமுனி சொய்சாவிற்கு நீர்ப்பாசன அமைச்சு வழங்கப்பட்டுள்ளதுடன் மஹிந்த அமரவீர கடற்றொழில் அமைச்சராக பதவிப் பிரமானம் செய்துள்ளார்.

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சராக சரத் அமுனுகம ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமானம் செய்துகொண்டார்.

திறன் விருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக பியசேன கமகே பதவியேற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்