ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் உருவாக்கப்படும் – ராஜித சேனாரத்ன

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் உருவாக்கப்படும் – ராஜித சேனாரத்ன

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் உருவாக்கப்படும் – ராஜித சேனாரத்ன

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2015 | 1:25 pm

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது வரையும் எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று முதற் தடவையாக அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் அமைச்சரவையிலும் இணைந்துகொள்ளவுள்ளனர், இதனூடாக தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்