விநாயகமூர்த்தி முரளிதரனால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை

விநாயகமூர்த்தி முரளிதரனால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை

விநாயகமூர்த்தி முரளிதரனால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2015 | 9:32 am

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருதரப்பினரும் விசாரணைகளுக்காக இன்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

வாழைச்சேனை பகுதியிலுள்ள வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன், தன் மீது தாக்குதல் நடாத்தியதாக
வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ். வனராஜா நியூஸ் பெஸ்ட்டிற்கு நேற்று தெரிவித்திருந்தார்.

அத்துடன், தன்னை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகவும் எஸ்.வனராஜா நியூஸ் பெஸ்ட்டிற்கு குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இருதரப்பினரும் இன்று பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் விவசாய நிலமொன்று குறித்துட ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது, இந்த தாக்குதலுக்கு இலக்கான நபர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் நாளைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்படவுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த எதிர்பார்க்கின்றோம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்