தாயை கொலை செய்ய முயற்சித்த 12 வயது சிறுமி

தாயை கொலை செய்ய முயற்சித்த 12 வயது சிறுமி

தாயை கொலை செய்ய முயற்சித்த 12 வயது சிறுமி

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2015 | 12:22 pm

ஐ-போன் கொடுக்காததால் பெற்ற தாயை 2 முறை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சித்த 12 வயது சிறுமியால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த 12 வயது சிறுமி கடந்த மார்ச் 2 ஆம் திகதி பாத்திரம் கழுவ பயன்படுத்தும் இரசாயனத்தை காலை உணவில் கலந்து தாய்க்கு கொடுத்துள்ளார். ஆனால் இதை சாதரணமாக கண்டுபிடித்த தாய், பாத்திரத்தை சரியாக கழுவாமையே இதற்கு காரணம் என்று நினைத்துள்ளார். எனவே, இதை அவர் கண்டுகொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து, 4 நாட்களுக்கு  பிறகு அந்த சிறுமி மீண்டும் குடிநீரில் விஷம் கலந்து   தனது தாயை கொல்ல முயன்ற போதுதான் சொந்த மகளே தன்னை கொலை செய்ய முயன்றது அவருக்கு தெரியவந்தது.

இதற்கு ஐ-போனை கொடுக்காதது தான் காரணம் என்பதையும் அறிந்த அவர் இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸாருக்கு அந்த சிறுமி தனது தாயை கொல்ல முயன்றது தெரிவந்தது. இதனையடுத்து அந்த சிறுமி கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்