சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷல் பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டார்

சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷல் பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டார்

சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷல் பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டார்

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2015 | 4:35 pm

பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியான சரத் பொன்சேகா, பீல்ட் மார்ஷலாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றார்.

பாதுகாப்பு அமைச்சின் விமான தளத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

1970ஆம் ஆண்டில் கெடட் உத்தியோகத்தராக இராணுவத்தில் இணைந்துகொண்ட சரத் பொன்சேகா, 2009 ஆம் ஆண்டில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார்.

சுமார் 30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா கடமையாற்றியிருந்தார்.

ஒருபோதும் ஓய்வுபெறாத பதவிநிலையான பீல்ட் மார்ஷல் பதவியானது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு சமமானதாகும்.

நாடொன்றின் முப்படையில் உயரிய பதவியாக பீல்ட் மார்ஷல் பதவி கருதப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்