ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது – ஜனாதிபதி

ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது – ஜனாதிபதி

ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2015 | 11:04 am

வலய நாடுகள் மாத்திரமன்றி, அனைத்து ஐரோப்பிய நாடுகளினதும் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அந்த நாடுகள் புதிய அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை, நாட்டு மக்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் சர்வதேசத்திற்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரிவினையை, புதிய அரசாங்கம் நிறைவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலன்னறுவை வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய குருதி மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு, உலக நாடுகள் சில, கடந்த காலங்களில் ஆதரவுகளை வழங்கி வந்ததாகவும்  இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுப்படுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்