இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 229 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 229 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 229 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2015 | 1:04 pm

இலங்கையில் கடந்த ஆண்டில் மாத்திரம் 229 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய் பிரிவு தெரிவிக்கின்றது.

இவர்களில் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிடுகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் 77 எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 41 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பதிவு சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர் 2073 பேர் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே குறிப்பிடுகின்றார்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி பரிசோதனைகளில் 9 கர்ப்பிணி தாய்மார்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்கள் 6 பேருக்கு சிசு பிரசவம் இடம்பெற்றுள்ளதுடன், அந்த சிசுக்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகவில்லை என டொக்டர் சிசிர லியனகே குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்