இந்திய மீனவர்கள் 54 பேர் கைது

இந்திய மீனவர்கள் 54 பேர் கைது

இந்திய மீனவர்கள் 54 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2015 | 11:41 am

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 54 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் ஆகிய கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் ஐந்து படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 21 மீனவர்களும், தலைமன்னார் கடற்பரப்பில் ஐந்து படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 33 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இன்று கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பதில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்