விரல் நுனியில் மின்சாதனங்களை இயக்கும் மோதிரம் கண்டுபிடிப்பு

விரல் நுனியில் மின்சாதனங்களை இயக்கும் மோதிரம் கண்டுபிடிப்பு

விரல் நுனியில் மின்சாதனங்களை இயக்கும் மோதிரம் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2015 | 3:51 pm

லண்டனில் விரல் நுனியில் மின்சாதனங்களை இயக்கும் மோதிரம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பார்வையிழந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த மோதிரம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த மோதிரத்தை விரலில் அணிந்துக் கொண்டு நீங்கள் என்ன செய்ய விரும்புகின்றீர்களோ அதை விரலால் சுழற்றி காற்றில் எழுதினால் போதும், எல்லா மின்சாதனங்களும் தன்னுடைய பணியை செவ்வனே செய்யும்.

இதேபோல், வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்ய வேண்டுமானால் கைபேசியை எதிரே வைத்துக் கொண்டு யாருக்கு, எவ்வளவு தொகை அனுப்ப வேண்டும் என விரல் நுனியை அசைத்து கட்டளையிட்டால் நொடிப்பொழுதில் அது நிறைவேறி விடும்.

இத்தனை சிறப்பம்சங்களுடன் கூடிய நவீன மோதிரத்தை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த மோதிரம் “வைப்ரேட்டிங் சென்சார்” என்ற அதிர்வலைகளை உள்வாங்கி கொண்டு விரலசைவின் கட்டளைகளுக்கு ஏற்ப கட்டுப்பட்டு செயற்படுவதாக  தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்