யாழில் சட்ட விரோத வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்

யாழில் சட்ட விரோத வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்

யாழில் சட்ட விரோத வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2015 | 3:28 pm

யாழ் நெல்லியடி பகுதியில் குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப் பிரஜை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த இந்திய பிர​ஜை நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

31 வயதான குறித்த இந்திய பிரஜை இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்