மேற்கிந்திய தீவுகள் அணியை 143 ஓட்டங்களால் வீழ்த்தியது நியூசிலாந்து

மேற்கிந்திய தீவுகள் அணியை 143 ஓட்டங்களால் வீழ்த்தியது நியூசிலாந்து

மேற்கிந்திய தீவுகள் அணியை 143 ஓட்டங்களால் வீழ்த்தியது நியூசிலாந்து

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2015 | 1:35 pm

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 4ஆவது காலிறுதிச்சுற்றில் மார்ட்டின் கப்டிலினின் இரட்டைச்சதத்தின் உதவியுடன் நியூசிலாந்து அணி 143 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது.

உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக தனி நபர் ஓட்டங்களைப் பெறற் வீரர் என்ற சாதனைக்கு நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் இன்று உரிமை கோரினார்

மார்ட்டின் கப்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 237 ஓட்டங்களைக் குவித்தார்.

வெலிங்டனில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 393 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது

நியூசிலாந்து சார்பில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையையும் கப்டில் தம் வசப்படுத்தினார்

பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 30.3 ஓவர்கள் நிறைவில். சகல விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை பெற்று தோல்வியைத் தழுவியது

நியூசிலாந்து சார்பில் ட்ரெனட் போல்ட் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்
போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தென்னாபிரிக்க அணியை அரையிறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்