பேலியகொடையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பேலியகொடையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பேலியகொடையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2015 | 11:56 am

பேலியகொடை – நீர்கொழும்பு வீதியில் மீன் விற்பனைக் கடையொன்றிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய லொரி சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்