பஞ்சிகாவத்தை பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைப்பு

பஞ்சிகாவத்தை பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைப்பு

பஞ்சிகாவத்தை பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2015 | 2:18 pm

பஞ்சிகாவத்தை பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு 9 பெண்கள் உட்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விபச்சார விடுதியை நடத்திச் சென்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு, கிறேன்பாஸ், இராகம, தெவிநுவர, தலங்கம, சீதுவ, வெளிமடை, பியகம மற்றும் பேலியகொடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்