இலங்கைக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க கொரிய அரசாங்கம் தீர்மானம்: தலதா அத்துகோரள

இலங்கைக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க கொரிய அரசாங்கம் தீர்மானம்: தலதா அத்துகோரள

இலங்கைக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க கொரிய அரசாங்கம் தீர்மானம்: தலதா அத்துகோரள

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2015 | 11:05 am

இந்த வருடத்தில் இலங்கைக்கு 4000 முதல் 5000 வரையான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முன்னைய வருடங்களில் நடைபெற்ற கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் என வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவிக்கின்றார்.

முன்னுரிமை அடிப்படையில் தொழில் வழங்குவது தொடர்பில் கொரிய தொழில் வாய்ப்பு நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதியுடன் நேற்று கலந்துரையாடியதாகவும் அமைச்சர் கூறினார்.

இதன்படி கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சையில் சித்தியடைந்து அதற்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெயர் வெளியானவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அசமந்தப்போக்கு காரணமாகவே கடந்த காலங்களில் வெளிநாட்டு தொழில்வாய்ப்புகள் பலவற்றை இழக்க நேரிட்டதாக அமைச்சர் தலதா அத்துகோரள மேலும் குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்