இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகளை மீண்டும் நடத்த தீர்மானம்

இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகளை மீண்டும் நடத்த தீர்மானம்

இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகளை மீண்டும் நடத்த தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2015 | 9:55 am

நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் சென்னையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் சார்பாக மீனவ சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் 10 பேர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தையின் மேற்பார்வையாளர்களாக கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 06 பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இரண்டு நாடுகளினதும் மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான 2 ஆம் சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகள் கடந்த வருடம் மே மாதமளவில் இறுதியாக இடம்பெற்றிருந்தன.

முதற் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தமிழகத்தின் சென்னையில் நடைபெற்றதுடன், எவ்வித இணக்கப்பாடுகளும் இன்றி இந்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்திருந்தன.

இம்முறை நடைபெறவுள்ள மீனவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி சென்னை நோக்கி பயணமாகவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்