அரசாங்கம் வழங்கும் உதவிகளை மக்களிடம் கையளிப்பது அரச ஊழியர்களின் பொறுப்பு: ஜனாதிபதி

அரசாங்கம் வழங்கும் உதவிகளை மக்களிடம் கையளிப்பது அரச ஊழியர்களின் பொறுப்பு: ஜனாதிபதி

அரசாங்கம் வழங்கும் உதவிகளை மக்களிடம் கையளிப்பது அரச ஊழியர்களின் பொறுப்பு: ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2015 | 5:22 pm

அரசியல் தலைமைத்துவம் மற்றும் அரசாங்கத்தினால் மக்களுக்காக வழங்கப்படுகின்ற வசதிகளை அவர்களின் கையில் சேர்க்க வேண்டிய பொறுப்பு அரச ஊழியர்களுக்கு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்படுகின்ற செயற் திட்டங்களை மக்களுக்கு பயன்படும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு அந்தத் திட்டங்களை உரிய தரத்துடன் மக்களிடம் ஒப்படைக்க வேண்டியதும் அரச ஊழியர்களின் பொறுப்பு என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலன்னறுவையில் இன்று கர்ப்பிணித் தாய்மாருக்கு போஷாக்கு உணவிற்காக 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்