ஹபராதுவ பஸ் தரிப்பிட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைதியின்மை

ஹபராதுவ பஸ் தரிப்பிட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைதியின்மை

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 10:08 pm

ஹபராதுவையில் புதிய பஸ் தரிப்பிடத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்ற போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

200 இலட்சம் ரூபா செலவில் ஹபராதுவையில் புதிய பஸ் தரிப்பிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று முற்பகல் அமைச்சர்களான கயந்த கருணாதிலக மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னர் அங்கு சென்ற பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி உள்ளிட்ட குழுவினர் துண்டு பிரசூரங்களை விநியோகித்தனர்.

கடந்த அரசாங்கத்தின் திட்டமே குறித்த பஸ் தரிப்பிடத்தை அமைத்தல் என அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சர் சீ.பீ.ரத்தநாயக்க இதற்கான நிதி ஒதுக்கீட்டை வழங்கியிருந்த போதிலும் தற்போதைய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு சுற்றுநிரூபம் அனுப்பியது, அமைச்சரிடம் இதனை முன்னெடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது, ஹபராதுவ மக்கள் புத்திசாலியானவர்கள. போலியான விடயங்களுக்கு அவர்கள் ஒருபோதும் துணை நிற்க மட்டார்கள் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்