முறிகள் விநியோக பிரச்சினையின் ஊடாக அரசாங்கம் தொடர்பில் நாட்டிற்குள் அதிருப்தி – சஜித் பிரேமதாச

முறிகள் விநியோக பிரச்சினையின் ஊடாக அரசாங்கம் தொடர்பில் நாட்டிற்குள் அதிருப்தி – சஜித் பிரேமதாச

முறிகள் விநியோக பிரச்சினையின் ஊடாக அரசாங்கம் தொடர்பில் நாட்டிற்குள் அதிருப்தி – சஜித் பிரேமதாச

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 7:17 am

முறிகள் விநியோக பிரச்சினையின் ஊடாக அரசாங்கம் தொடர்பில் நாட்டிற்குள் அதிருப்தி ஏற்பட்டு வருவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார்.

வீரகெடிய – மெதமுலன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் சஜித் பிரேமதாச இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

[quote]
இந்த அரசாங்கத்தின் ஊடாக நாம் நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளோம். நல்லாட்சியின் ஊடாக இந்த நாட்டிற்குள் ஊழல் மற்றும் மோசடிகளை முற்றாக ஒழித்து, நல்லாட்சியை அரச சேவையில் ஏற்படுத்துவதாக வாக்குறுதி வழங்கினோம். நாட்டு மக்கள் அரச அதிகாரத்தை எம்மிடம் ஒப்படைத்தனர். மத்திய வங்கியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் ஊடாக நாட்டிற்குள் அதிருப்தி நிலை உருவாகியுள்ளது. அதனை எவராலும் மறைக்க முடியாது. எவரேனும் தவறு இழைத்திருந்தால், அவரை நீக்குவது மாத்திரமின்றி, சட்ட ரீதியாக தண்டனை வழங்குவதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணிப்பு செய்துள்ளது. [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்