பாடசாலை நீர் தாங்கியினுள் நஞ்சு குப்பி – ஏழாலையில் 27 மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை நீர் தாங்கியினுள் நஞ்சு குப்பி – ஏழாலையில் 27 மாணவர்கள் வைத்தியசாலையில்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

19 Mar, 2015 | 10:30 am

யாழ்ப்பாணம் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தைச் சேர்ந்த 27 மாணவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டு யாழ். போதனா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையிலுள்ள குடிநீர்த் தாங்கியிலிருந்து நீரைப் பருகியதை அடுத்து, குறித்த மாணவர்கள் நோய்வாய்ப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

குடிநீர் பருகிய மாணவர்கள் மயக்கமுற்றதாகவும் அதனைத் தொடர்ந்து பாடசாலை ஆசிரியர்கள் நீர்த்தாங்கியை சோதனையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பாடசாலையில் உள்ள குடிநீர்த் தாங்கிக்குள் வெற்று நஞ்சுக் குப்பிகள் இரண்டு இருந்ததாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

தரம் ஒன்று தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புக்கள் உள்ள இந்த பாடசாலையில் 464 மாணவர்கள் கல்விகற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்