பம்பலப்பிட்டி வர்த்தகக் கட்டடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

பம்பலப்பிட்டி வர்த்தகக் கட்டடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

பம்பலப்பிட்டி வர்த்தகக் கட்டடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 11:30 am

கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல வர்த்தகக் கட்டடத் தொகுதியொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று காலை 7.15 அளவில் குறித்த கட்டடத் தொகுதியில் தீ பரவியதாக, கொழும்பு தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வர்த்தகக் கட்டடத் தொகுதியின் ஏழாவது மாடியில் பரவிய தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் காலி வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்