பங்களாதேஷிற்கு 303 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்த இந்தியா

பங்களாதேஷிற்கு 303 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்த இந்தியா

பங்களாதேஷிற்கு 303 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்த இந்தியா

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 1:51 pm

உலககக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 2 ஆவது காலிறுதி போட்டியில் பங்களாதேஷ் அணிக்கெதிராக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 303 ஓட்டங்களை பங்களாதேஷ் அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.

அவுஸ்திரேலியா மெல்பேர்னில் நடைபெற்று வரும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய  அணி 50 ஓவர்களில் 6  விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 302 ஒட்டங்களை குவித்தது.

இந்திய அணி போட்டியின் ஆரம்பத்தில் ஓட்டங்களை குவித்த போதிலும் முதல் இரண்டு விக்கெட்டுக்கள் இழந்ததை அடுத்து இந்திய அணி ஓட்டங்களை குவிப்பதில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும்​ ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோஹித் ஷர்மாவின் சிறப்பான  துடுப்பாட்டத்தினால் அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்தது.

ஷிகர் தவான்  30 ஓட்டங்களுடனும்  விராட் கோஹ்லி 3 ஓட்டங்களுடனும் , அஜின்கயா ரஹானே 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் ரொபெல் ஹூசைன் மற்றும் ஷகிப் அல் ஹசன் , டஸ்கின் அஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்