நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம்

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம்

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம்

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 7:41 am

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரமொன்றை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரையான காலப் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டங்களை முன்னெடுக்க அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

வானிலை மாற்றத்துடன் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன கூறியுள்ளார்

இதேவேளை, இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் 10 ஆயிரத்து 650 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் 46 வீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்