துறைமுக நகரின் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க தரவுகள் வழங்கப்படவில்லை:  சுற்றாடல் அமைச்சு

துறைமுக நகரின் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க தரவுகள் வழங்கப்படவில்லை: சுற்றாடல் அமைச்சு

துறைமுக நகரின் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க தரவுகள் வழங்கப்படவில்லை: சுற்றாடல் அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 12:14 pm

துறைமுக நகரின் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையை தயாரிப்பதற்கான தரவுகள், துறைமுக அதிகார சபையினால் இதுவரை வழங்கப்படவில்லை என மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அண்மையில் துறைமுக நகர திட்டத்தின் ஒப்பந்தகாரரான சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் விடயங்களைக் கோரியுள்ளதாக, அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிடுகின்றார்.

இதன் பிரகாரம் சுற்றாடல் அறிக்கையை மீளத் தயாரிப்பதில் அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து தமக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

துறைமுக நகரின் நிர்மாணங்களுக்கு தேவையான கற்கல் மற்றும் மணலை பெற்றுக்கொள்ளும் இடங்கள் தொடர்பில் இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்காத காரணத்தினால் பிரச்சினைகள் தோன்றியிருந்தன.

எனவே தரவுகள் வழங்கப்படுமாயின், துறைமுக நகருக்கான சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையை விரைவாக மீண்டும் தயாரிக்க முடியும் என மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்