திறைசேரி முறிகள் விநியோக மோசடி: மத்திய வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம்

திறைசேரி முறிகள் விநியோக மோசடி: மத்திய வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம்

திறைசேரி முறிகள் விநியோக மோசடி: மத்திய வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

19 Mar, 2015 | 7:35 am

திறைசேரி முறிகள் கொடுக்கல் வாங்கல்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குளறுபடிகள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி, மத்திய வங்கிக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இதேவேளை, இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கிக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுனர் உடனடியாக பதவி விலக வேண்டுமென இவர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் திறைசேரி முறிகள் தொடர்பிலான கொடுக்கல் – வாங்கல் குறித்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்தார்.

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்