கிளிநொச்சி மற்றும் வாழைச்சேனை விபத்துக்களில் இருவர் பலி

கிளிநொச்சி மற்றும் வாழைச்சேனை விபத்துக்களில் இருவர் பலி

கிளிநொச்சி மற்றும் வாழைச்சேனை விபத்துக்களில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 7:47 am

கிளிநொச்சி மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் இடம்பற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி கனகபுரம் பகுதிக்கு சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் டிப்போ சந்திக்கு சென்றுகொண்டிருந்த துவிச்சக்கரவண்டியில் மோதியுள்ளது.

விபத்தில் துவிச்சக்கரவண்டியை செலுத்தியவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவரும் அதே வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். இதேவேளை, மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த வேன் ஒன்று நாவலடி பகுதியில் துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். வேனின் சாரதி  கைது செய்துள்ள வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்