இந்தியா 109 ஓட்டங்களால் அபார வெற்றி

இந்தியா 109 ஓட்டங்களால் அபார வெற்றி

இந்தியா 109 ஓட்டங்களால் அபார வெற்றி

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 5:54 pm

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 2 ஆவது காலிறுதி போட்டியில் பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் இந்தியா 109 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அந்த வகையில் இந்நிய அணி சார்பில் விளையாடிய ரோஹித் சர்மா சிறப்பான துடுப்பாட்டத்தை மேற்கொண்டு 137 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன், ரெய்னா 65 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 302 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய பங்களாதேஷ் 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்