ICC 2015 : 134 என்ற குறைந்த இலக்கை தென்ஆபிரிக்காவுக்கு நிர்ணயித்த இலங்கை

ICC 2015 : 134 என்ற குறைந்த இலக்கை தென்ஆபிரிக்காவுக்கு நிர்ணயித்த இலங்கை

ICC 2015 : 134 என்ற குறைந்த இலக்கை தென்ஆபிரிக்காவுக்கு நிர்ணயித்த இலங்கை

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2015 | 12:22 pm

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் இலங்கை அணி 133 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்ததுள்ளது.

மழை காரணமாக இடைநிறுத்தப்பட்ட போட்டி மீண்டும் ஆரம்பமானபோது ஆடுகளத்தில் நுழைந்த இறுதி துடுப்பாட்ட  வீரர் லசித் மலிங்க 3 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி 37.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 133 என்ற குறைவான ஓட்ட எண்ணிக்ககையை மாத்திரம் பெற்றுள்ளது.

முன்னதாக இலங்கை அணி 36.2 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 127 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழை குறுக்கிட்டது.

குமார் சங்கக்கார 96 பந்துகளுக்கு 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததை தொடர்ந்து மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இலங்கை அணி தோல்வியுறும் பட்சத்தில் இது குமார் சங்கக்காரவின் இறுதி ஒருநாள் போட்டியாக அமையும்.

மஹேல ஜயவர்தன 16 பந்துகளுக்கு 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார்.

லஹிரு திரிமான 41 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 3 ஓட்டங்களையும், திலக்கரட்ன தில்ஸான் ஓட்டங்கள் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.

அணித்தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் 19 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததுடன் திசர பெரேரா ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

நுவன் குலசேகர ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு 134 என்ற குறைவான ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் இந்த போட்டியில் இலங்கை அணி தோல்வியுறும் பட்சத்தில் 2015 உலக் கிண்ண போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்