மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிராக ஐ.ம.சு.கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிராக ஐ.ம.சு.கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிராக ஐ.ம.சு.கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2015 | 2:30 pm

மத்திய வங்கியின் ஆளுனர் மேற்கொண்டதாக கூறப்படும் நிதி மோசடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று முற்பகல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள மத்திய வங்கியின் தலைமையகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியவாறு இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றிருந்தனர்.

அங்கு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, மத்திய வங்கியின் ஆளுநர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமானளவு ஆதாரங்கள் இருப்பதால் விசாரணைகள் தேவையற்றது எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்