சஜின் டி வாஸ் குணவர்தனவிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை

சஜின் டி வாஸ் குணவர்தனவிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை

சஜின் டி வாஸ் குணவர்தனவிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2015 | 8:49 pm

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று மூன்று மணித்தியாலங்கள் விசாரணை செய்துள்ளது.

அரசாங்க நிதி நிறுவனம் ஒன்றில் 33 வாகனங்களைக் கொள்வனவு செய்த சம்பவத்தில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

33 வாகனங்கள் பெற்றுக்கொண்ட விடயத்தில் 170 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்