சங்காவை வாழ்த்தி வழியனுப்பிய மழை – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி இடைநிறுத்தம்

சங்காவை வாழ்த்தி வழியனுப்பிய மழை – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி இடைநிறுத்தம்

சங்காவை வாழ்த்தி வழியனுப்பிய மழை – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2015 | 12:01 pm

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதி போட்டி சற்று நேரத்திற்கு முன்னர் மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

இலங்கை அணி 36.2 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 127 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழை குறுக்கிட்டது.

குமார் சங்கக்கார 96 பந்துகளுக்கு 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததை தொடரந்து மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இலங்கை அணி தோல்வியுறும் பட்சத்தில் இது குமார் சங்கக்காரவின் இறுதி ஒருநாள் போட்டியாக அமையும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இலங்கை அணி 127 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

மஹேல ஜயவர்தன 16 பந்துகளுக்கு 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார்.

லஹிரு திரிமான 41 ஓட்டங்களையும், குசல் ஜனித் பொரேரா 3 ஓட்டங்களையும், திலக்கரட்ன தில்ஸான் ஓட்டங்கள் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.

அணித்தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் 19 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததுடன் திசர பெரேரா ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

நுவன் குலசேகர ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்