கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரிக்கப்பட்டது

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரிக்கப்பட்டது

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2015 | 6:12 pm

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் விஜித் மலல்கொட மற்றும் எச்.சீ.ஜே. மடவல ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை இடம்பெற்றது.

இந்தத் திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ள சூழல் மதிப்பீட்டு அறிக்கை மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும் என மனுதாரரான சூழல் நீதிக்கான கேந்திர நிலையம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரவிந்திரநாத் தாபரே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

துறைமுக நகரத் திட்டத்திற்கான மதிப்பீடு 300 ஏக்கர் பிரதேசத்திற்கானது என்றபோதிலும், அந்த திட்டம் 567 ஏக்கரில் நிர்மாணிக்கப்படுவதாக சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால், நாட்டிற்கும், சூழலுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை யாதென முதலில் அறிந்துகொள்ள வேண்டியுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் பிரகாரம் துறைமுக நகரத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில், எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் தெளிவுபடுத்துமாறு சட்ட மாஅதிபருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்