கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2015 | 10:43 am

கிளிநொச்சி தர்மகேணி பகுதியில் இடம்பெற்ற லொறி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

பளையிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறி ஏற்றி வந்த லொறி ஒன்றே வேகக் கட்டுப்பாட்டை இழந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

லொறி உரிமையாளரும், உதவியாளருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

பளை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்