ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் ஓடும் கார் கண்டுபிடிப்பு

ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் ஓடும் கார் கண்டுபிடிப்பு

ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் ஓடும் கார் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2015 | 4:19 pm

துபாய் நாட்டிலுள்ள ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு லிட்டர் பெட்ரோலில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை ஓடக்கூடிய அதிநவீன காரை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளனர்.

Eco Dubai 1 என பெயரிடப்பட்டுள்ள இந்த காரின் மொத்த எடை வெறும் 25 கிலோ மட்டுமே.
இரண்டு மீட்டர் நீளம், அரை மீட்டர் அகலம், அரை மீட்டர் உயரத்தில் இந்த நவீன காரை வடிவமைத்துள்ளனர்.

பெட்ரோல் நீண்ட நாட்களுக்கு நிலைத்து கிடைக்கப் போவதில்லை. எனவே, சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத நவீன போக்குவரத்துக்கு இத்தகைய கண்டுபிடிப்புகள் மிகவும் அவசியமானது என இதன் தலைமை வடிவமைப்பாளராகிய மாணவர் அஹ்மத் கமிஸ் அல் சுவைதி குறிப்பிட்டார்.

கோலாலம்பூரில் வரும் ஜுலை மாதம் நடைபெறும் அரியவகை கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியில் இந்த நவீன காரின் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்