இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2015 | 10:11 am

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 43 இந்திய மீனவர்கள், இந்திய கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட 43 இந்திய மீனவர்களும் நேற்று மாலை அந்நாட்டு கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக, பதில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவிக்கின்றார்.

இதேவேளை விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை கொண்டு செல்வதற்காக 125 பேரை கொண்ட குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும், பதில் இராணுவ பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய படகுகளில் 34 படகுககளை அவர்கள் மீள கொண்டு செல்லவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்