இந்து ஆலயங்களில் கொள்ளையிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – டி.எம்.சுவாமிநாதன்

இந்து ஆலயங்களில் கொள்ளையிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – டி.எம்.சுவாமிநாதன்

இந்து ஆலயங்களில் கொள்ளையிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – டி.எம்.சுவாமிநாதன்

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2015 | 8:13 pm

இந்து ஆலயங்களில் கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு அங்குள்ள விலைமதிப்புள்ள பொருட்கள் திருடப்படுவதைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்து ஆலயங்களை உடைத்து பொருட்களைத் திருடும் கலாசாரத்தை உடனடியாக நிறுத்துமாறும், சம்பந்தப்பட்டவர்களிடம் தனது அறிக்கையின் ஊடாக அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெனியாய பகுதியிலுள்ள பல கோயில்கள் கடந்த காலங்களில் உடைக்கப்பட்டதுடன், கிழக்கின் முதல் பெண் சிற்றரசியின் சிலையும் உடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்