இந்திய மீனவர்கள் தாக்குதல்: இலங்கை கடற்படை நிராகரிப்பு

இந்திய மீனவர்கள் தாக்குதல்: இலங்கை கடற்படை நிராகரிப்பு

இந்திய மீனவர்கள் தாக்குதல்: இலங்கை கடற்படை நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2015 | 12:56 pm

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்தமைக்காக இந்திய மீனவர்கள் கடற்படையினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை கடற்படை நிராகரித்துள்ளது.

இந்திய மீனவர்கள் எவரையும் தாக்கவில்லை என பதில் இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் நேற்று கல் வீச்சுத் தாக்குதல் நடத்தியதாகவும், மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் சுடப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவித்திருந்த நிலையில், இராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டதாக மீனவ சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நல்லெண்ண அடிப்படையில் இலங்கைக்கு விஜயம்செய்த ஒருசில நாட்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்