இதுதான் ஓய்வுபெறுவதற்கு சிறந்த தருணம் – குமார் சங்கக்கார

இதுதான் ஓய்வுபெறுவதற்கு சிறந்த தருணம் – குமார் சங்கக்கார

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2015 | 9:17 pm

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கையின் எதிர்ப்பார்ப்பு காலிறுதியுடன் முடிவுக்குவந்தது.

காலிறுதிப் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 134 ஓட்டங்களை 18 ஓவர்களில் கடந்த தென் ஆபிரிக்கா நான்காவது தடவையாக அரை இறுதிக்கு முன்னேறியது.

இதேவேளை, ஓய்வுபெறுவதற்கு இதுவே சிறந்த தருணம் என்று போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குமார் சங்கக்கார கூறினார்.

குமார் சங்கக்கார தெரிவித்ததாவது;

[quote]இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் அல்லது அதனைவிட சில காலம் என்னால் விளையாட முடியும் என்று நான் நினைக்கிறேன். என்றாலும், இதுதான் ஓய்வுபெறுவதற்கு சிறந்த தருணமாகும். 4 வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் உலகக்கிண்ணப் போட்டிகள் தான் அதற்கு சிறந்தது. இந்தத் தீர்மானம் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். விளையாடிய சகல போட்டிகளிலும் முழுத்திறனை வெளிப்படுத்த முயற்சித்துள்ளேன். பல வருடங்களாக ரசிகர்கள் எனக்குத் தந்த ஒத்துழைப்பை நான் ஆதரிக்கிறேன். அவர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் என்னை சிறந்த மனிதராகவும், சிறந்த வீரராகவும் உருவாக்கியுள்ளது.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்