வர்த்தகர் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபர் கைது

வர்த்தகர் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபர் கைது

வர்த்தகர் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபர் கைது

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2015 | 9:06 am

மட்டக்குளியில் வர்த்தகர் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபா கப்பம் கோரியதாக கூறப்படும் கிரான்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

06 பேரடங்கிய குழுவொன்று கடந்த வாரம் மட்டக்குளியிலுள்ள வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி கப்பம் கோரியிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதுடன், கப்பம் கோருவதற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் கைத் துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கொழும்பிலுள்ள பிரதான பாதாள கோஷ்டியின் உறுப்பினர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், மற்றொரு சந்தேகநபரை கைதுசெய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்