பொலிஸ் உத்தியோகத்தர்கள் 08 பேர் பணியில் இருந்து இடைநிறுத்தம்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 08 பேர் பணியில் இருந்து இடைநிறுத்தம்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 08 பேர் பணியில் இருந்து இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2015 | 10:44 am

சிலாபத்தில் மாவட்ட சுற்றிவளைப்பு பிரிவின் 08 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் உப பரிசோதகர்கள், சார்ஜன் மற்றும் 05 கான்ஸ்டபிள்கள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்,உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

தங்கொட்டுவ பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பொன்றில் கடமை தவறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதுதொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்