திறைசேரி முறிகள் விநியோக மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்

திறைசேரி முறிகள் விநியோக மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2015 | 9:43 pm

திறைசேரியின் முறிகள் விநியோகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற மோசடிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை மத்திய வங்கியில் இருந்து 124 மில்லியன் டொலர்களை நீக்குவதற்கான அனுமதியை வழங்கியது யார் என பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார, மத்திய வங்கியின் முறிகள் ஏலம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிப்பார் என தாம் எண்ணுவதாகவும் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சூழலை அர்ஜூண மகேந்திரன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் விசாரணைகள் முடிவுறும் வரையில் அரச நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பதாக அவர் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்