தமக்கான உரிமைகளை வழங்குமாறு கோரி தொடர்ந்தும் கொள்கலன் வாகன உரிமையாளர்கள் போராட்டம்

தமக்கான உரிமைகளை வழங்குமாறு கோரி தொடர்ந்தும் கொள்கலன் வாகன உரிமையாளர்கள் போராட்டம்

தமக்கான உரிமைகளை வழங்குமாறு கோரி தொடர்ந்தும் கொள்கலன் வாகன உரிமையாளர்கள் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2015 | 8:42 am

கொழும்பு, இங்குறுகடை சந்திக்கு அருகில் துறைமுக வாயிலை இடைமறித்து கொள்கலன் உரிமையாளர்கள் ஆரம்பித்த எதிர்ப்பு தொடர்வதாக ஐக்கிய இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிடுகின்றது.

எதிர்ப்பு நடவடிக்கையை இன்று வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உதேனி களுதாந்திரி தெரிவித்தார்.

தமக்கான உரிமைகளை வழங்குமாறும், நிர்வாக ரீதியில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறும் கோரி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

தமக்கான உரிய தீர்வு வழங்கப்படாதவிடத்து, துறைமுக செயற்பாடுகளை முற்றாகப் பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐக்கிய இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்